காணாமல் போன காதல்: காதலர் தினத்தில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வு!

நாளை (14) உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வொன்றை கொழும்பு பல்கலைகழக சட்டபீட மாணவர்களும், சில பொது அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. காணாமல் போன காதல் (Missing Lovers Day) என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வடக்கு கிழக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஒரு பகுதியினர் கொழும்ப செல்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவுகூர்வதும், அவர்களிற்கான நீதிக்காக குரல் எழுப்புவதுமே இந்த நிகழ்வின் நோக்கமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts