காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவின் முன்னாள் இலங்கையின் பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஜீவ் வீஜேசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி மற்றும் சட்ட ஆலோசகர் மனோஹர டி சில்வா உட்பட 29 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்றே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த அறிக்கையை வழங்க அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.