ஜனாதிபதி கையொப்பமிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (12) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவது அவசியமாகும்.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று முன்தினம் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.