காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் காணாமல் போனதாக கூறப்படும் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கருதப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொள்வதே, இதன் நோக்கம் என, குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 20,000க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது என, இது தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகம் கூறியுள்ளது.
இதேவேளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது