காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
அடுத்த மாதமளவில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக கிளிநொச்சியில் காணாமல் போனவர்கள் தொடாபில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.