காணாமல் போனோர் குறித்து முறைப்பாடு செய்ய புதிய இணையம்

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு பொது மக்களின் முறைப்பாடுகளை பெறவென இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

Kanamal-ponor

www.pcicmp.lk என்ற பெயரிலான இணையத்தளம் நாளை (20) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

அதன்படி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் இணையத்தின் ஊடாக முறைப்பாடு பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதம் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

ஜூன் 6,7ம் திகதிகளில் காத்தான்குடியிலும் 8,9ம் திகதிகளில் மண்முனைப்பற்றிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

Related Posts