கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) காலை அங்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள், அம் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்துகொண்டனர்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக கடந்த 179 நாட்களாக இம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம் மக்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இம்மக்களின் கோரிக்கைக்கு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், அண்மையில் கொழும்பிற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகங்களிலும் மகஜர்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது