இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர்.
இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார்.
இதன் போது காணாமல் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணகி அம்மன் முன்னிலையில் கண்ணீர் வடித்து அழுதுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த குறித்த இராணுவத்தளபதி காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், ஆறுதல் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.