காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் அங்குள்ள யுத்த நினைவு சின்னம் வரை இடம்பெற்றது.

இதன்போது, தமது கைகளை கட்டியவாறு, தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தி உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய உறவுகள், ராஜபக்ச குடும்பத்தை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தமது நிலங்களில் உள்ள இராணுவம் வெளியேற வேண்டும் எனவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts