காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார்.

காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டமானது டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி, அவர்களது உறவுகளால் கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts