காணாமல்போனோரின் உறவுகள் பாப்பரசரைத் தரிசிக்க மடு நோக்கி பயணம்

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர்.

தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து விளக்குவதற்காக உறவுகள் மடு நோக்கிப் பயணமாகினர்.

காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எந்தப் பதிலும் இல்லாது, அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லை என்பது கூடத் தெரியாது நாம் அல்லல்படுகிறோம்.

எமது இந்த அவலத்தை தீர்த்து வைக்க பாப்பரசர் முன்வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன்

“திருத்தந்தையே இறுதிப் போரில் சரணடைந்த கணவர் பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள், கேள்வி எழுப்புங்கள்”,

“கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள், உறவுகளைத் தேடி அலைகிறோம். எங்களுக்கு ஆறுதல் தாருங்கள”,

“தந்தையே உங்கள் பாதம் பதியும் இடம் புனிதமாக இருக்க வேண்டும். இங்கு இனப்படுகொலை மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன.”,

“உங்கள் பாதம் பதிந்த ஈழமண் விடிவு காணவேண்டும் பொதுசன வாக்கெடுப்புக்கு பரிந்துரை செய்யுங்கள்”

உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மடுத்திருத்தலம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

Related Posts