கடந்த சனிக்கிழமை (13) முதல் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை, கொற்றாவத்தையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் வைத்து திங்கட்கிழமை (15) காலை மீட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சிறுமியை 2 நாட்களாக கடத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அதேயிடத்தைந் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.
வீட்டிலிருந்த மேற்படி சிறுமி, கடந்த சனிக்கிழமை (13) முதல் காணாமல் போயிருந்ததாக சிறுமியின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை (14) வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே அச்சிறுமி மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.
சிறுமி தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.