காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கைச் சிறுமி (காணெளி)

காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணொளியில், பிரதான வீதியில் தன்னை நோக்கி வரும் காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் தனது கைகளால் கட்டுப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.

அதாவது சிறுமி கையை காட்டி முன்னோக்கி நடந்து செல்ல யானை பின்னோக்கி நகர்கின்றது. சில நிமிடங்களில் யானை காட்டுக்குள் ஓடி விடுகின்றது.

இந்த காணொளியை பார்த்த சிலர் சிறுமியை பாராட்டியுள்ள போதும் சிலர் சிறுமியின் பெற்றோருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Related Posts