காஞ்சனா 2 ஆக மாறியது முனி 3

லாரன்ஸ் நாயகனாக நடித்து இயக்கிய முனி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இப்படங்களின் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்கிறார். இதற்கு முனி 3 கங்கா என பெயரிடப்பட்டது.

larance_tapsi

ஆனால் தற்போது இப்படத்தின் தலைப்பை காஞ்சனா-2 ஆக மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. முனி 3 கங்கா என்ற பெயரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் தலைப்பை மாற்றியிருக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் திகில் படமாக தயாராகியுள்ள இப்படத்தை காஞ்சனா போலவே வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆதலால் இப்படத்தின் தலைப்பை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திலும் லாரன்சே நாயகனாக நடிக்கிறார். அவரே இயக்கவும் செய்கிறார். இதில் நாயகிகளாக டாப்ஸி, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

Related Posts