காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
காசநோயாளர்களுக்கு தலா 3,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், இதனை 5,000 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நாட்டில் 8,511 காசநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என, சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
காசநோயாளரல்களுள் கூடுதலானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்படுள்ளனர். இதற்கமைய 3,601 பேர் மேல் மாகாணத்தில் காச நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது மொத்தத்தில் 42 சதவீதம் எனவும் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னரே குறித்த நோயை இனங்கண்டு சிகிச்சைப்பெற்றுக்கொண்டால் இதனை முற்றாக குணப்படுத்த முடியும் என, சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.