காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இவ்வாறு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டமானது இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts