காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பு!

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பிற்கு அமைவாக, வடக்கின் பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்படி இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போது காணப்படுகின்ற பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் புதிய இறங்கு துறையொன்றை நிர்மாணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், புதிய இறங்குதுறையின் பணிகளை இலங்கைத் துறைமுக அதிகாரசபையினால் மேற்கொள்வதற்கும், இதற்குத் தேவையான கொள்முதல் மற்றும் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதற்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க அமைச்சரவையில் அங்கீகாரம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts