காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை மீண்டும் ஆரம்பம்!

KKSகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறித திசேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் மீள் உற்பத்தி செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போது இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து கம்பனி பாகிஸ்தானிலிருந்து சிமெந்தினை இறக்குமதி செய்து லங்கா சிமெந்து மற்றும் காங்கேசன் சீமெந்து என்ற பெயர்களில் அதனை உள்நாட்டில் சந்தைப்படுத்த தீர்மானித்துள்ளது என்றும் இதன்மூலம், சந்தையில் எந்தவித தட்டுப்பாடுகளும் இன்றி, குறைந்த விலையில் சீமெந்தை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts