1950 ஆம் ஆண்டில், முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ஜி.ஜி. பொன்னம்பலத்தினால் அமைக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, இந்த வருட இறுதியில் தமது உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது.அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர் காரணமாக பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை. தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காங்கேசன்துறை சிமேந்து ஆலை தமது பணிகளை ஆரம்பிக்கும் போது, வடக்கு கிழக்கு உட்பட்ட இடங்களின் கட்டுமாணப்பணிகளுக்கு அது பாரியளவில் உதவும் என்று வலி கமகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆலையில் ஒரு மணித்தியாலத்துக்கு 2600 சீமெந்து பொதிகளை உற்பத்தி செய்யமுடியும். இதன்படி வருட உற்பத்தி 249. 600 மெற்றிக்தொன்களாகும். இதன்மூலம் வருடம் ஒன்றுக்கு 90 மில்லியன் ரூபாய்களை வருமானமாக எதிர்ப்பார்ப்பதாக விலி கமகே குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த சீமெந்து உற்பத்திக்கான முழுமை மூலப்பொருட்களும் யாழ்ப்பாணம், மன்னார். மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.