காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட அரசு முயற்சி

வடக்கின் மிகப் பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வடக்கில் நிலவிய போர் சூழல் காரணமாக 1990ம் ஆண்டு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை மூடப்பட்டது.

அதற்கு முன்னரான காலப் பகுதியில் இலங்கையின் சீமெந்துத் தேவையில் சுமார் 20 வீதம் சீமெந்து இங்கிருந்துதான் உற்பத்தி செய்விக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

அதன் ஒருகட்டமாக தொழிற்சாலையைப் புனரமைத்து இயங்க வைப்பதற்கான சர்வதேச மட்டத்திலான டெண்டர் அறிவித்தல் மிக விரைவில் கோரப்படவுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் பட்சத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீமெந்தில் 25 சதவீதத்தை இங்கே உற்பத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts