காங்கேசன்துறை-சிதம்பரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் சிதம்பரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்.ஆளுநனர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில்,

‘காங்கேசன்துறைக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளும் இணங்கியுள்ளன. ஆனால் தற்போது போக்குவரத்துக்கு தேவையான கப்பலை அடையாளம் காண்பதே பிரச்சினையாகவுள்ளது.

ஆரம்பத்தில் சிதம்பரம் கோயிலுக்குசெல்லும் பக்தர்களும், மதத்தலைவர்களும் இந்த கப்பல் பயணத்திற்கான அனுமதியைக் கோரியிருந்தாலும் தற்போது அதற்கான கப்பல் தேவையாகவுள்ளது.
எனவே ஒரு கப்பலை அடையாளம் காண நான் முயற்சிக்கின்றேன்.

கடற்படையிடம் இருந்து கப்பலைப் பெற்றுக்கொள்வதே எமது முதலாவது நோக்கம் அப்படியானால் அதற்கும் இந்திய அரசாங்கத்தினது அனுமதி அவசியம்.அல்லது அரசாங்கத்தின் அனுமதியுடன், இந்தியக் கடற்படையிடம் இருந்து கப்பலை பெற்றுக் கொள்வது இந்த இரு யோசனைகளையும் குறிப்பிட்டு இந்திய தூதுவராலயத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒருவார காலத்திற்குள் அதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.

Related Posts