காங்கேசன்துறையை அடைந்தது யாழ்தேவி

யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது.

இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார்.

எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

train-3

train-KKS-kankesanthurai

train-2

Related Posts