காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டவர்களை மிரிஹான முகாமுக்கு மாற்றுமாறு நிதிமன்றம் உத்தரவு

காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்ட 32 மியன்மார் நாட்டவர்களை மிரிஹான தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு யாழ்.மல்லாகம் நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், 32 பேரில் 30 பேர் தவிர்ந்த ஒரு படகு ஓட்டிகளான இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறும்வரையில் தடுத்து வைக்கும் படியும் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து 12 கடல்மைல் தூரத்தில் தத்தளித்து கொண்டிருந்த படகையும் அகதிகளையும் கடந்த 30ம் திகதி இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். குறித்த படகில் 16 சிறுவர்கள் உட்பட 32 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 30பேர் அகதிகளும் 2 இந்திய படகோட்டிகளும் அடங்குவர். இவர்கள் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதே நீதிவான் மேற்படி உத்தரவை வழங்கியுள்ளார். இதேவேளை மியான்மார் மக்கள் சார்பாக யாழ்.முஸ்லிம் பொதுமக்கள் ஒன்றியத்தின் சட்டத்தரணி ஒருவர் மன்றில் ஆஜராகி இருந்தார். அவர் மியான்மார் நாட்டிலிருந்து அகதி அந்தஸ்த்து கோரி இலங்கை வந்த அவர்களை பாதுகாப்பான நாட்டுக்கு திரும்பி அனுப்பும் வரையில் இலங்கையில் தஞ்சம் கொடுக்கவேண்டும் என குறித்த சட்டத்தரணி கேட்டு கொண்டார்.

இதேவேளை மேற்படி 30 அகதிகளையும் மிரிஹானயில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பும்படி நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இரு இந்திய படகோட்டிகளையும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்படும் வரையில் தடுத்து வைக்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts