வட மாகாணத்தில் அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அணு உலைகளின் கதிர் வீச்சுக்களினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய சுற்றாடல் அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நோக்கில் வட மாகாணத்தின் நான்கு இடங்களில் இந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன.
காங்கேசன்துறை, நெடுந்தீவு,கல்பிட்டி,மற்றும் தலைமன்னார் ஆகிய பிரதேசங்களில் முதல் கட்டாமாக இந்த கட்டமைப்புக்கள் அமைக்கப்பட உள்ளன.
இரண்டாம் கட்டத்தில் கொழும்பு, திருகோணமலை, காலி, கண்டி போன்ற இடங்களில் மேலும் இவ்வாறான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. அணுக் கதிர்வீச்சு தாக்கங்களை கண்டறியும் வகையிலான கருவிகள் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.