காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

KKS-train

காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

rain1

rain5

உத்தியோகபூர்வ சேவையினை அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்திலும் பங்கேற்றிருந்தனர்.

2011 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி ஓமந்தை வரையும், 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி கிளிநொச்சி வரையும் படிப்படியாக நீடிக்கப்பட்ட ரயில் சேவை 2014 மார்ச் 4ம் திகதியன்று பளை வரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2014 ஒக்டோபர் 13ம் திகதியன்று யாழ்ப்பாணத்தை யாழ்தேவி சென்றடைந்தது

இதனிடையே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் காங்கேசன்துறைவரையான சேவை இன்றைய தினம் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts