காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை 2 ஆம் திகதி ஆரம்பம்.

யாழ்தேவி ரயில் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வரவுள்ள அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக புகையிரத சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்தநிலையில் புகையிரத புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காங்கேசன்துறைக்கான புகையிரதப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளதெனவும் விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் வடக்கில் ஆரம்பித்துள்ள நிலையில் காங்கேசன்துறைக்கான புகையிரத சேவையையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் அந்தப் பகுதியில் தேர்தல் கூட்டம் ஒன்றையும் நடத்த ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts