காக்கைதீவுப் பகுதியில் மாடுகளின் கொல்கலன் கழிவுகள் கொட்டப்படுவதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம், காக்கைதீவுப் பகுதியின் அராலி வீதியோரத்தில், மாடுகளின் கொல்கலன் கழிவுகள் முறைகேடாகக் கொட்டப்படுவதனால், குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையினால் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகள் நிறைந்த கல்லுண்டாய் வெளிக்கும் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மீள்சுழற்சி பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே, இந்தக் கழிவுகள் மதகுடன் கொட்டப்பட்டுள்ளன.

இப்பகுதியானது, கடற்கரையை மிகவும் அண்டிய பகுதியாகவும் அராலி, வட்டுக்கோட்டை, காரைநகர் ஆகிய கிராமங்களுக்கன போக்குவரத்து வீதியாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, கழிவுகளின் துர்நாற்றம் வீசி சுவாசம் தொடர்பான நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். . எனவே, குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக அக்கழிவுகளை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Posts