சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் காக்கி சட்டை படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் படம் வெளியாகும் முன்னர் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை என்ற செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் கூட நடந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் வந்ததும், தனுஷ் வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வந்தது. அச்செய்திகளை குறித்து சிவகார்த்திகேயனும் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்று பதில் அளித்திருந்தார்.
ஆனாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. தற்போது இவர்களின் சண்டை குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல சில சீன்கள் வைக்க இயக்குநரை சிவகார்த்திக்கேயன் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு இயக்குனர் மறுத்திருக்கிறார். இதுபற்றி தயாரிப்பாளர் தனுஷுடம் புகார் கூறியதால் தான் சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.