விருமாண்டியில் நடித்த பிறகு காணாமல் போன அபிராமியை கமல்தான் விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச மீண்டும் அழைத்து வந்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸ் அபிராமிக்கு செமையாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.
மலையாளத்தில் சுரேஷ்கோபியின் மனைவியாக அப்போதகரே படத்தில் நடித்தவர் தற்போது மலையாள ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவின் தோழியாக நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து த காப் இன் ட்ரைவர் ஆன் டியூட்டி என்ற மலையாளப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் பல வாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளதால் முன்பு போலவே முழுநேர நடிகையாக முடிவு செய்துள்ளாராம்.