கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை: எஸ்.சத்தியசீலன்

saththiyaseelanபூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் வழக்குத் தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களும், குறிக்கப்பட்ட நிபந்தனையாகிய ஐந்து வருட கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இடமாற்றம் வழங்கப்படவில்லை என வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்திசீலன் தெரிவித்தார்.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் மூன்று ஆசிரியர்கள் கடந்த வருடம் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்களுக்கு சில நிபந்தனைகள் வழங்கப்பட்டன. அந்நிபந்தனைகளாக கஸ்டப் பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அல்லது வசதியான பிரதேசமாக இருந்தால் ஆறு வருடங்களை வன்னிப் பிரதேசத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இவை இரண்டையும் பூர்த்தி செய்யாத காரணத்தினால் வழக்குத்தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களுக்கும் கடந்த வருடம் இடமாற்றம் வழங்கப்படவில்லை என செயலாளர் எஸ்.சத்திசீலன் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஆசிரியர்கள், வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்விப் பணிப்பாளர், இடமாற்ற சபைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்றையதினம் வழக்குத்தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

வடமாகாண ஆளுநர், கல்வி அமைச்சர் ,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றி வழக்கு தாக்கல்

Related Posts