கவுனவத்தையில் ஒரு துளி இரத்தம் சிந்த கூடாது! நீதிபதி எச்சரிக்கை

கவுனவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தடையை நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் எடுத்து கொள்ளப்பட்டது.

அதன் போது மேல் நீதிபதி கவுனவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நீதிபதி அத தொடர்பில் குறிப்பிடுகையில் ,

ஆலயத்தில் மிருக பலியிடுதல் தடை நீடிக்கப்படுகின்றது. தடையை மீறி ஆலய சூழலில் மிருகத்தின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் , நிர்வாக சபையினர் , ஆலய பூசகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்பட்டு இரண்டு வருடத்திற்கு குறையாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.

அத்துடன் ஆலயம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்படும். ஆலய வேள்வி உற்சவத்தின் போது , ஆடுகள் , கோழிகளை ஆலயத்திற்கு கொண்டு வந்து பூஜை வழிபாடுகளை செய்வதற்கு தடையில்லை. ஆனால் அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள் கோழிகளை பலியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு துளி இரத்தம் எனும் ஆலய சூழலில் சிந்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக நீதிபதி ஆலய நிர்வாகத்தை எச்சரித்தார்.

அத்துடன் கடந்த வேள்வி உற்சவத்தின் போது ஆலயத்திற்கு சுன்னாகம் , இளவாலை , மானிப்பாய் மற்றும் தெல்லிப்பளை போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தனர் எனவும் தெரிவித்தார்.

Related Posts