கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இணையும் ஹரஹர மகாதேவகி

தற்போது முத்துராமலிங்கம், இவன் தந்திரன் படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக் அடுத்து நடிக்கும் படம் ஹரஹரமகாதேவகி.

kowstham-karthy-harahara-mahadevi

இதில் நிக்கி கல்ராணி கவுதம் ஜோடியாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும் சரவணன் உதவியாளர் சந்தோஷ் பீட்டர் இயக்குகிறார்.

சதீஷ், மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணா, ரவி மரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். பால முரளி பாலு என்ற புதுமுகம் இசை அமைக்கிறார், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ்.தங்கராஜ் தயாரிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

“இது பிளாக் காமெடி டைப்பிலான படம். 50 சதவிகிதம் காமடியும், 50 சதவிகிதம் திகிலும் இருக்கும். படப்பிடிப்பு அனைத்தும் சென்னையில் நடக்கிறது. வருகிற 23ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு குறுகிய கால தயாரிப்பாகும்” என்றார் இயக்குனர் சந்தோஷ் பீட்டர்.

Related Posts