கவுதம்மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்

டைரக்டராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.கே.சூர்யா. தற்போது கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இது திகில் கதை. இதை எழுதியதும் செல்வராகவன்தான்.

தனுஷ் படம் ஒன்றை செல்வராகவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தனுஷ் ஏற்கனவே நடிக்க தயாராக உள்ள 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பு எஸ்.கே.சூர்யாவை வைத்து ஒருபடத்தை இயக்க செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கவுதம்மேனன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை விரைவாக எடுத்து முடிக்கவும் செல்வராகவன் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts