கவுதமின் கனவு படம்!

விக்ரம் நடிக்கும், துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது.

கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமும், கவுதம் மேனனும், இதில் கூட்டணி அமைத்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதற்கேற்ற வகையில், படத்தின், ‘பர்ஸ்ட் லுக், டிரெயிலர்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சூர்யாவுக்காக, இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கினார் கவுதம். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இப்போது விக்ரமை வைத்து இயக்கும் கவுதம், ‘இது என் கனவுப் படம்; கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்’ என, நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Related Posts