கவாஸ்கர் சாதனையை முறியடித்தார் குக்

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் செயல்படுபவர் அலைஸ்டர் குக். 31 வயதான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். 2006-ல் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

England v Pakistan: 1st Investec Test - Day Two

சிறந்த பேட்ஸ்மேன் ஆன இவர் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். 8900 ரன்னைக் கடக்கும்போது டெஸ்டில் அதிக ரன்கள் குவி்த்த கிரகாம் கூச் சாதனையை முறியடித்து அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின் குறைந்த வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

10122 ரன்களை தாண்டும்போது கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார். தற்போது கவாஸ்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடித்துள்ளார். கவாஸ்கர் தொடக்க வீரராக களம் இறங்கி 119 போட்டிகளில் 9607 ரன்கள் குவித்து சாதனைப் படைத்திருந்தார். இந்த சாதனையை, தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முறியடித்துள்ளார் குக்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும்போது குக் 9549 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் 59 ரன்கள் எடுத்திருக்கும்போது 9608 ரன்கள் எடுத்து கவாஸ்கர் சாதனையை முறியடித்தார். இதுவரை 130 போட்டிகளில் விளையாடியுள்ள குக் 7 முறைதான் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் குக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts