கவலையில்லாத மனிதராக வாழ ஆசையா?: பேஸ்புக்கில் இருந்து விடுபடுங்கள்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மக்களின் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பேஸ்புக் விரும்பிகள் ஆயிரத்து தொன்னுற்றைந்து பேரிடம் ஆய்வு மேற்கொண்டது.

ஒவ்வொரு நாளும் தமது பேஸ்புக் பக்கத்தை தவறாது கவனித்து வரும், இந்த பயன்பாட்டாளர்களை இரு குழுவாக ஆராய்ச்சியாளர்கள் பிரித்தனர். இதில், ஒரு குழுவினருக்கு வழக்கம்போல தமது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், மற்றொரு குழு இந்த ஆராய்ச்சியாளர்களின் உத்தரவுப்படி பேஸ்புக் பக்கத்திலிருந்து விடுபட்டனர்.

[otw_shortcode_quote border_style=”bordered” background_pattern=”otw-pattern-5″]நமது வாழ்க்கை மிகவும் மோசமாக இருப்பதாகவும், நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இன்னும் அதிகமான சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர் என்ற போலி பிம்பத்தை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் நாம் அறியாமலே நம்மை நம்ப வைத்து வருகின்றது.[/otw_shortcode_quote]

இந்த ஆய்வு தொடங்கிய ஒரே வாரத்தில் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துவதை நிறுத்தியவர்கள், தொடர்ந்து பயன்படுத்தி வருவோரைக் காட்டிலும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக தெரியவந்தது.

நமது வாழ்க்கை மிகவும் மோசமாக இருப்பதாகவும், நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இன்னும் அதிகமான சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர் என்ற போலி பிம்பத்தை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் நாம் அறியாமலே நம்மை நம்ப வைத்து வருகின்றது. இதனால், நம்மிடம் இருக்கும் விஷயங்களை எண்ணி மகிழ நாம் மறந்தே போகின்றோம்.

இதுவே, நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என இந்த ஆய்வுக் குழுவின் முடிவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

Related Posts