கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யாராய் குழந்தை ஆரத்யா பிறந்த பிறகு சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். ‘ஜஸ்பா’ படம் மூலம் மீண்டும் ‘பாலிவுட்’ பட உலகுக்கு திரும்பினார்.

ஆனால் இந்த படம் எதிர் பார்த்தபடி ஓடவில்லை. தற்போது, கரண் ஜோகிதர் இயக்கத்தில், ‘ஏக் தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். ரன்பிர் கபூர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் கோலியின் காதலி அனுஷ்கா சர்மாவும் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யாராயும், நாயகன் ரன்பிர் கபூரும் உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று படமாக இருந்தது. ஆனால் அந்த காட்சியில் நடிக்க ஐஸ்வர்யா மறுத்து விட்டார்.

இதனால் இந்த காட்சியை மாற்றி வேறு விதமாக படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். ஆடை குறைப்பு, படுக்கை அறை மற்றும் கவர்ச்சியான காட்சிகளிலும் நடிப்பதில்லை என்று ஐஸ்வர்யாராய் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யாராய் கூறும்போது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts