முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்க முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதும், இதுவரை தமக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தாம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தமது போராட்டம் கவனிப்பாரற்று தொடர்வதாகவும், தாம் தமது பிள்ளைகளை தொலைத்துவிட்டு நிம்மதியின்றி வாழ்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.