தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தலிற்கு முன் தமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் நிர்வாக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (08) நடைபெற்றிருந்தது.
இதன்போதே கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.