கள­மி­றங்­கு­கி­றது விக்கி­னேஸ்­வரனின் தமிழ் மக்கள் கூட்­டணி!

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி கள­மி­றங்­க­வுள்­ளது.

இதற்­கான முன்­னேற்­பா­டு­களில் அந்தக் கட்சி ஈடு­பட்­டுள்­ள­துடன் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்­மையில் அறி­விப்பு வெளியிட்­டி­ருந்தார். வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்­கி­லேயே இந்த அறி­விப்பு வெளியி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் தற்­போது திடீ­ரென பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மை­யினால் இந்தத் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் விக்­னேஸ்­வரன் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­கின்­றது.

Related Posts