2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெறுபேறுகள் பதிவேற்றப்படுகின்றன என்றும் பதிவேற்றியவுடன் முடிவுகளைப் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை கடந்த மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.