கல்வி நிர்வாக சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன.

219 வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாகவும் 515 வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலமாகவும், 118 வெற்றிடங்கள் இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களில் சேவை மூப்பு மூலமாகவும் நிரப்பப்பட உள்ளது.

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு அந்த சேவையைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைய அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களை தவிர்த்து கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை உரிய பதவிகளில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி ஆகும்.

Related Posts