கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை

கடும் வெப்பநிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கமைய, பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை குறைப்பது மற்றும் மாணவர்கள் அதிகமாக தண்ணீர் அருந்த ஊக்குவிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெயிலின் தாக்கத்திலிருந்து இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொப்பி மற்றும் குடை முதலானவற்றைப் பயன்படுத்த மாணவர்களை வழிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Related Posts