கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை(09) கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) தொழிற் சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில் நாளையும்(09) போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச பாடசாலைகள் அனைத்தும் நாளை (9) வழமைபோல் செயற்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts