Ad Widget

கல்வியை வழங்குபவர்களுக்கும்,வேண்டி நிற்பவர்களுக்குமிடையில் இடைவெளி காணப்படுகிறது – முதலமைச்சர்

இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலு அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில் மாற்றம் அவசியம். கல்வியை வழங்குபவர்களுக்கும் கல்வியை வேண்டி நிற்பவர்களுக்குமிடையில் இடைவெளி காணப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

cv-chanthe

வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியிடும் நிகழ்வு காலை 9.30 மணிக்கு யா/வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற போது உரையாற்றிய முதலமைச்சர் அதனைத் தெரிவித்தார்.

யாழ், மன்னார் மாவட்டத்தில் சனத்தொகை வளர்ச்சி வீதம் மறைப்பெறுமானத்தில் காணப்படுகிறது. மேலும் இடப்பெயர்வு காரணமாக எம் மக்கள் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் குறைந்த சனத்தொகை வளர்ச்சி கொண்ட மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகிறது.

கல்வியில் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவகக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி

வடமாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீடு

Related Posts