கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவிருக்கின்றன.

கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்டிபாக அவர் மேலும் தெரிவிக்கையில, மூவாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு நான்காயிரம் ரூபா வரையும், நான்காயிரம் ரூபா கொடுப்பனவு ஐயாயிரம் ரூபா வரையும் அதிகரிக்கப்படவிருப்பமதாக தெரிவித்தார்.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் ஐயாயிரம் ரூபாவிலிருந்து ஆறாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவிருப்பதாகவும் கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் 19 கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிக்கென நான்காயிரத்து 65 பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 2014ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. புதிய மாணவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் கல்வியியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுன்னமை குறிப்பிடத்தக்கது.

Related Posts