கல்வியியல் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சைப் பெறுபேறு இன்று இணையத்தில்!

கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் கல்வி அமைச்சின் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்விக் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

ஆங்கில பாடநெறிக்கு 320 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், தொழில்நுட்ப பாடநெறிக்கு 100 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடநெறிகளுக்கான போட்டிப் பரீட்சையில் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts