கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டரா தெரிவிக்கையில்:
பஸ்துன்ரட்ட மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களின் கல்லூரிகளை தவிர நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது என்றார்.
கல்வியாண்டுக்கு நான்காயிரத்து 69 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 2014ம் ஆண்டு கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.