கல்வியியல் கல்லுரிகளுக்கு விண்ணப்பங்கள்

கல்வியியல் கல்லுரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இம்முறை பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உயர்தரத்தில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி பிரிவின் ஆணையாளர் கே.எம்.எல்.பண்டார தகவல் தருகையில் 2014ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மூன்று பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை நான்காயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள்.

ஐம்பது சதவீதமான ஆட்சேர்ப்பு மாவட்ட திறமை அடிப்படையிலும், ஏனைய ஐம்பது சதவீதமானவர்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள்.

இது தொடர்பான விபரம் அரசாங்க வர்த்மானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி அமைச்சின் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 600 பேருக்கு ஐந்து கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும். அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இரண்டாவது குழுவுக்கான பயிற்சி அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Posts