கல்வியங்காடு வீடுகளுக்குள் அட்டூழியம் – ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் கைது

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதல் மற்றும் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்படடார்.

கோப்பாய், கல்வியங்காடு – ஆடிய பாதம் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து 4 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

4 மோட்டார் சைக்கிள்களில் முகத்துக்கு துணி கட்டி வந்த 8 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியது. காதலால் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்கு காரணமென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் கூறினர்.

Related Posts